search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதங்கள் பறிமுதல்"

    இலங்கையில் அதிரடிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் வைத்திருந்த 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #SrilankaBlast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 
     
    தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு
    களுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படை நேற்று நடத்திய சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில், இலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிகுண்டு மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை பதுக்கி வைத்திருந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டின் அருகில் தற்கொலைப்படை அங்கிகள் இரண்டையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #SrilankaBlast
    இலங்கையில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். #SrilankaBlast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 
     
    தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

    இந்நிலையில், இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படையினர் இன்று சோதனை நடத்தினர்.

    இதில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை ஆகியோர் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், இலங்கையின் நுவரெலியா நகரில் நடந்த சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது. #SrilankaBlast
    திருச்சியில் 34 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் அஜிபா. இவரது மகன் சாதிக்பாட்சா. இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பாலக்கரை எடத்தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற மர்ம நபர், சாதிக்பாட்ஷாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறித்துள்ளார். மேலும் இது குறித்து போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

    இது குறித்து சாதிக்பாட்சா காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்தி விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது பாலக்கரை பிள்ளை மாநகரை சேர்ந்த அந்துவன் மகன் வைத்தன் சுதாகர் (வயது40) என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை, அடிதடி என திருச்சி மாநகர காவல் நிலையங்களில் மொத்தம் 34 வழக்குகள் உள்ளது. 

    இந்தநிலையில் வைத்தன் சுதாகரின்  தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத் தின் கீழ் கைது செய்ய மாநகர  கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து  போலீசார் தேடி வந்தனர்.  

    இந்த நிலையில் பிச்சை நகர் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சுதாகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம்  இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ரூ.1000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ×